எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது

காரைக்கால், மார்ச். 7 : திருநள்ளாறை சேர்ந்த முனைவர் சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் முனைவர் சோமசுந்தரம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:36 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், மார்ச். 7 : திருநள்ளாறை சேர்ந்த முனைவர் சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் முனைவர் சோமசுந்தரம் முருகேசன், புதுச்சேரி கல்வித்துறையில் பிரெஞ்சுக் கல்வித்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரெஞ்சு மொழிக் கல்வி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பிரெஞ்சு மொழி புத்தகங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையுடைய இவருக்கு, பிரான்ஸ் நாட்டு கல்வித்துறையால் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது கிடைத்தது குறித்து சோமசுந்தரம் முருகேசன் புதன்கிழமை கூறும்போது பிரெஞ்சு மொழியை பரப்பியது, பல்வேறு பிரெஞ்சு புத்ததகங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது, பிரெஞ்சுக் கல்விக்கு ஆற்றிய பணியை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது தமக்கு தரப்பட்டுள்ளது. விருதுக்கான மெடல் புதுச்சேரி பிரான்ஸ் கவுன்சில் மூலம் அடுத்த 10 நாள்களில் தமக்கு கிடைத்துவிடுமென தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.