நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

பழனி, மே 4: பழனி அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:05 am

என்.​ அங்​கு​பாபு

பழனி, மே 4: பழனி அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி காலை 8.30க்கு தொடங்கும். இந்நிலையில் இன்று காலை பழனியில் 8.30க்குப் பிறகு சற்று தாமதமாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களை மையத்துக்குள் விடாமல் கதவை இழுத்துப் பூட்டியுள்ளார் மையத்தின் கண்காணிப்பாளரான தமிழ்ச்செல்வி என்பவர். இதனால் அவர்கள் விடைத்தாள் திருத்த இயலாமல் போனது. இதனைக் கண்டித்து, மற்ற ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, பள்ளியின் வாசல் கதவு அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400க்கும் அதிகமான ஆசிரியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.