திருக்கோவிலூர், மே 13: திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் பாவாடை மகன் ஆதிமுத்துவுக்குச் சொந்தமான வீடு கோவிலுக்கு அருகே உள்ளது. கிராமத்தினர் பொதுக்கூட்டம் போட்டு, அந்த வீட்டின் ஒரு பகுதியினை கிராம நலனுக்காகக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். பல கட்டப் பேச்சுவார்த்தையை அடுத்து, ஒரு நாள் அந்த இடத்தை கிராமத்தினர் இடித்துவிட்டனர். இதை அடுத்து, ஆதிமுத்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீஸார், இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அருணாசலம் ஆகிய மூவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.