ஸ்ரீவில்லிபுத்தூர், மே, 14 : ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கே. புதூரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் இன்று காலை மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கே. புதூரைச் சேர்ந்த பழனிச்சாமி நாடார் மகன் சுரேஷ் (40) இவர், கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். ஊராட்சி மன்றத் தேர்தலில் இவரை எதிர்த்து இதே இடத்தைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் கருத்த பாண்டியன் என்ற ரௌடியின் ஆதரவோடு நின்றார். ஆனால் தேர்தலில் பிரபாகரன் தோல்வி அடைந்தார். இதில் ரௌடி கருத்தபாண்டியன் கும்பலுக்கும் சுரேஷூக்கும் விரோதம் ஏற்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் கருத்தப்பாண்டியனின் ஆட்கள் சுரேஷின் வீட்டிற்குள் சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் ஊரின் அருகே உள்ள வெண்ணைக்கொண்டான் கண்மாய்க்கு சுரேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கே பதுங்கியிருந்த ஒரு கும்பல் அரிவாளால் சுரேஷை வெட்டிக் கொன்றதுள்ளது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சக்திவேல் விசாரணை மேற்கொண்டார். கிருஷ்ணங்கோயில் போலிசார் வழக்குப் பதிவு செய்து தங்கம் மாரியப்பன் (34) என்வரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவகாசியைச் சேர்ந்த கோபால், கருப்பு, கே புதூரைச் சேர்ந்த குமார், கண்ணன், மதுரைப்பாண்டி ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.
இச்சம்பவத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர்கள் அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


