6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரம்பலூரில் நீச்சல் பழகச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி சாவு

பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் அருகே, நீச்சல் பழகச் சென்ற மாணவி உள்பட 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரஞ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:32 am

தர்மராஜ்

பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் அருகே, நீச்சல் பழகச் சென்ற மாணவி உள்பட 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரஞ்சித்குமார் (16). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகள் பாரதி (15). அம்மாபாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துள்ளார்.

தற்போது, கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித்குமார், பாரதி மற்றும் அவரது நண்பர்கள் நீச்சல் கற்றுக் கொள்ள அந்தப் பகுதியில் உள்ள வயல்காட்டு கிணற்றில் செவ்வாய் இன்று காலையில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித் குமார், பாரதி ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், கிணற்றில் குதித்து இறந்தவர்களின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள நாவக்குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் எஜமான் (14) மற்றும் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூரில் உள்ள உறவினரான நடராஜ் வீட்டுக்கு வந்தனராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை  இன்று அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் நீச்சல் கற்றுக் கொள்ளச் சென்ற எஜமான், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த, பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவங்கள் குறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.