6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் பலி

மேலூர், மே 30 : மதுரையை அடுத்த மேலூர் அருகே இன்று காலை இருவேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர் மேலூர் அருகே தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முஸ்தபா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:33 am

தர்மராஜ்

மேலூர், மே 30 : மதுரையை அடுத்த மேலூர் அருகே இன்று காலை இருவேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்

மேலூர் அருகே தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முஸ்தபா (50) இவரது வீட்டில் நடைபெறவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை வரவேற்க மேலூர்- திருச்சி நான்கு வழிச்சாலையில் கும்பப்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையத்தில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முஸ்தபா அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதேப்போல, மதுரை நான்கு வழிச் சாலையில் சூரக்குண்டு கிராமம் விளக்கு ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற பாரதி (45), ராஜா (46) மீது திருச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மோதியதில் இருவரும் துக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாரதி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் ராஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.