அனைத்து தேவர் கூட்டமைப்பினர் இன்று அழைப்பு விடுத்திருந்த பந்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து கடைகளும் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன. 4 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இன்று காலை முதலே பேருந்துகள் பெரும்பாலும் ஓடாததால் மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். ஒரு தரப்பினரின் 475 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கான்சாபுரத்தில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்களின் கண்டனத்தை அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
பரமகுடி தேவர் குருபூஜையையொட்டி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தேவர் கூட்டமைப்பினர் 7-ம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் காலை 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி உள்ளிட்ட தாலுகாவில் உள்ள அனைத்துப் பகுதியிலும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
பஸ்கள் உடைப்பு: ஏ.ராமலிங்காபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்ட அரசு பேருந்தை ஒருவர் கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. டிரைவர் டி.வடிவேல்ராஜா, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆத்துக்கடை தெரு வழியே செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆராய்ச்சிபட்டி திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிலர் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது. டிரைவர் சி.சேகர், நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பாற்கடல் அருகே ஒரு அரசு பேருந்தும், ஆத்துக்கடைத் தெருவில் ஒரு அரசு பேருந்தும் கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன.
வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: வத்திராயிருப்பு அர்சுணாபுரம் அருகே ராமையாத்தேவர் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 150 வாழை மரங்கள் மற்றும் 3 தென்னை கன்றுகள் வெட்டி சாய்க்கப்பட்டது. முருகன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 307 வாழை மரங்கள் வெட்டி மற்றும் ஒரு தென்னங்கன்று வெட்டி சாய்க்கப்பட்டது.
கான்சாபுரத்தில் தேவர் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
நகரில் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. சாலையில் போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

