மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி கிரானைட் நிறுவனங்களில் காவல்துறை சோதனை

மதுரை மேலூரில் உள்ள பிஆர்பி கிரானைட் நிறுவனங்களில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :8 நவம்பர் 2012, 7:47 am

தர்மராஜ்

மதுரை மேலூரில் உள்ள பிஆர்பி கிரானைட் நிறுவனங்களில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூரில் கிரானைட் முறைகேடு தொடர்பாக நிறுவனத்தின் குவாரிகள் மற்றும் தெற்கு தெருவில் உள்ள மெருகூட்டும் தொழிற்சாலைகளை காவல்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இந்தநிலையில், பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமியின் மகன் சுரேஷ் குமார் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் சீலை அகற்ற உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிகாரிகள் சீல் வைக்கும் விதிகளை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறி சீலை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு 4 வார காலம் தடை விதித்து நவம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தேதிகளில் தொழிற்சாலையில் சீல் வைக்கப்பட்ட கட்டட வளாகத்தைத் திறந்து அதில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு நகல் பிஆர்பி நிறுவன பிரதிநிதிகளிடம் அளிக்க வேண்டும்.

அதேப்போல, கணினிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்ய வசதியாக நிர்வாக அதிகாரிகள் ரகசிய குறியீடுகளைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், குவாரிகள், மற்ற இடங்களில் சீல் வைக்கப்பட்ட நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் கீழ் வியாழக்கிழமை கிரானைட் முறைகேடு விசாரணைக்கான தனிப்படை டிஎஸ்பி தங்கவேலு, இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, மேலூர் வட்டாட்சியர் வசந்தா ஜூலியட் மற்றும் கணினி நிபுணர்கள் சீலிடப்பட்ட கட்டடங்களைத் திறந்து ஆய்வினைத் துவக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.