மேலூரில் இதுவரை டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு 33 பேர் பலி
மதுரை, மேலூர் வட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைள் 33 ஆக உயர்ந்துள்ளது.


மதுரை, மேலூர் வட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைள் 33 ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை நள்ளரவில் இருந்து இன்று வரை 4 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று இரவு கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமாண்டி மகள் காயத்ரி (12) என்ற பெண் உயிரிழந்தாள். வியாழக்கிழமையன்று தெற்குத் தெருவில் உள்ள டி. வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ராஜா மகள் சுவேதா (10), தெற்குத் தெரு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராஜன் பெருமாள் (4), அட்டப்பட்டி அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலைராஜாவின் மகள் அம்மு என்கிற நட்சத்திரா (3) ஆகிய மூவரும் இன்று உயிரிழந்தனர்.
மதுரையில் மேலூர் பகுதியில் மட்டும் பாதித்து வந்த டெங்கு காய்ச்சல் தற்போது மதுரையின் பிற பகுதிகளுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு மேலூரில் இதுவரை 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் பிற காரணங்களால் இறந்ததாகவும் சுகாதாரத் துறை நேற்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...