அம்பாசமுத்திரத்தில் விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதியதில் வேன் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதியதில் வேன் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை அழைத்து செல்வதற்காக கல்லிடைக்குறிச்சிக்கு பள்ளி வேன் வந்து கொண்டிருந்தது. வேனை விக்கிரமசிங்கபுரம் அருகே இருதயகுளம் பகுதியை சேர்ந்த அம்புரோஸ் மகன் எடிசன் (38) ஓட்டினார்.
அம்பாசமுத்திரத்தில் ஆர்ச் அருகில் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு சிமெண்ட் மூடைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி சேதமைடந்தது. டிரைவர் எடிசனுக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரியை தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் (43)ஓட்டினார்.
போக்குவரத்து நிறைந்த பிரசான சாலையில் நிகழ்ந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர், போலீஸார், போக்குவரத்து வட்டார ஆய்வாளர் அய்யசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய வேனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...