மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது வழக்கு : வழக்குரைஞர்கள் சாலை மறியல்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடக்கோரி மதுரை- மேலூர் சாலையில் இன்று வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2012, 9:13 am

தர்மராஜ்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடக்கோரி மதுரை- மேலூர் சாலையில் இன்று வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டிது மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டச் செயலர் லயனர் அந்தோணி ராஜ் தலைமையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் நஸ்ரேன், லூர்துசாமி இருவர் மீதும் குண்டர் தடுப்புக் காவலை ரத்து செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த சாலை மறியலின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.