மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாமின் நிறுவன அதிகாரி உட்பட 13 பேருக்கு ஜாமீன்

மதுரா கிரானைட் முறைகேடு வழக்குகளில் மதுரை கிரானைட் அதிபர் பன்னீர் முகமது மற்றும் பல்வேறு கிரானைட் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ஆதரவாளர்கள் 13 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2012, 9:07 am

தர்மராஜ்

மதுரா கிரானைட் முறைகேடு வழக்குகளில் மதுரை கிரானைட் அதிபர் பன்னீர் முகமது மற்றும் பல்வேறு கிரானைட் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ஆதரவாளர்கள் 13 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரா கிரானைட் நிறுவனம் கீழவளவில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான குவாரியை ஒட்டி, ஆதி திராவிடர்களுக்குச் சொந்தமான மயான இடத்தை ஆக்ரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக கீழவளவு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பன்னீர் முகமது கைது செய்யப்பட்டார்.

பிஆர்பி கிரானைட், ஐஸ்வர்யா கிரானைட், மதுரா கிரானைட், சிந்து கிரானைட் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் ஆதரவாக செயல்பட்டவர்கள் 13 பேரையும் போலிஸார் ஏற்கனவே கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருந்தனர்.

அவர்களும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் தவிர கனிமவள நிறுவன அலுவலர் சென்னையைச் சேர்ந்த இ.க. சீனிவாசன், சிந்து கிரானைட் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர்கள் 15 பேரும் ஜாமீன் கோரும் மனுக்களை சி.டி. செல்வம், நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10000 டெபாசிட் செய்து, 2 நபர் ஜாமீன் அளித்தால் ஜாமீனில் விடுவிக்கவும், தினசரி காலை 10.30 மணிக்கு இந்த வழக்குகளைப் பதிவு செய்த கீழவளவு, மேலூர்,  ஒத்தக்கடை ஆகிய காவல்நிலையங்களில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விடுத்தும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.