மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு இன்று மேலும் இருவர் பலி
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை மேலும் இருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாயினர். மேலூர் பகுதிகளில் தொடர்ந்து இறப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை மேலும் இருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாயினர். மேலூர் பகுதிகளில் தொடர்ந்து இறப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் டவுனைச் சேர்ந்த வெள்ளநாதன்பட்டி பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மகள் பூமா(12) 7ம் வகுப்பு மாணவியான இவர், ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இன்று காலை திடீரென அவர் உயிரிழந்தார்.
மேலூர் தெக்குத்தெருவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் மகன் பாக்கியராஜ் (30), விவசாயியான இவர் ஒரு வாரமாக காய்ச்சலில் சிரமப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மேலூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலூர் பகுதியில் காய்ச்சல் பரவுவது தொடர்பாக மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா
கொட்டகுடி கிராமத்தில் ஆய்வு செய்தார்.
மேலூர் பகுதியில் காய்ச்சலால் இறப்புகள் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...