தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அம்பை அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல், கல்வீச்சு: 7 பேர் காயம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசி

News image
Updated On :13 நவம்பர் 2012, 5:32 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசி தாக்கியதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே கோவில்குளம் பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் சிலர் குடித்ததாக கூறப்படுகிறது. இதை ஒரு பிரிவினர் கண்டித்தனராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை ஒரு பிரிவினர் மறித்து தகராறு செய்தனராம். இதையடுத்து கோவில்குளத்தில் தெற்கு பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், வடக்கு பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது அங்கு சாலையில் கற்களை வைத்து மறித்தனர். இரு பிரிவினர் திரண்டு மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு பிரிவினரும் கல்வீசி தாக்கினராம். இதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். திருநெல்வேலி எஸ்.பி. விஜேந்திரபிதரி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆ. சிவகாமி, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பட்டு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.