சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அண்ணாமலை பல்கலை: அனைத்துக் கட்சி உண்ணாவிரதம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து இன்று அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :15 நவம்பர் 2012, 5:35 am

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து இன்று அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியினால் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து அதனைக் கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக சிதம்பரம் காந்தி சிலை அருகே அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதம் துவங்கியது.

சிதம்பரம் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி வள்ளல் பெருமான், திமுக நகரச் செயலாளர் கே.ஆர். செந்தில்குமார், தேமுதிக நகரச் செயலாளர் விஜயக்குமார், சிபிஎம் நகரச் செயலாளர் ராமச்சந்திரன், பாமக நகரச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ் கட்சியின் நகரச் செயலாளர் வி.எம். சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லப்பன், மூவேந்தர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜி. செல்வராஜ், லோக் ஜனசக்தி மாநிலச் செயலாளர் பன்னீர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள், பல்வேறு கட்சி உறுப்பினர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனால், அப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் வேறு வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.