மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி கிரானைட் நிறுவன தொழிலாளர்கள் ஏமாற்றம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை சீலிடப்பட்டுள்ளதால் நிறுவனம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

News image
Updated On :15 நவம்பர் 2012, 6:31 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை சீலிடப்பட்டுள்ளதால் நிறுவனம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கீழவளவு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் வண்டிப்பாறை உள்ளிட்ட கனிமவள நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களிலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி திருடிச் செல்லப்பட்டது.  இது தொடர்பாக பிஆர்பி அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் குவாரிகள் தெற்குத் தெருவில் உள்ள கிரானைட் மெருகேற்றும் நிறுவனத்துக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்த சீலை அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நிதிபதி உத்தரவிட்டபோதிலும் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த மேலுமுறையீட்டை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து,

மேலும் டிசம்பர் 5ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.கடந்த 8, 9,10 ஆகிய தேதிகளில் தனிப்படை போலிஸார் மற்றும் வருவாய்த் துறையினர், கனிமவளத் துறையினர் சீலிடப்பட்ட கட்டங்களில் இருந்த ஆவணங்கள் மற்றும் கணினிப் பதிவுகளையும் கைப்பற்றினர்.

சீலிடப்பட்ட நிலையே தொடருவதால் கம்பெனி மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனம், தீபாவளிக்கு பிறகு திறக்கப்படும் என்று அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்திருந்தனராம். இதனால் வியாழக்கிழமை காலை முதல் ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து மூடப்பட்டுள்ள தொழிற்சாலையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.