கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதி 3 பேர் பலி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிர் இழந்தனர். விபத்தைப் பார்க்க வந்த ஒருவர்


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிர் இழந்தனர். விபத்தைப் பார்க்க வந்த ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
சேலத்தில் இருந்து கொட்டாம்பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ் ஒன்று பள்ளப்பட்டி அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், அரசு பஸ் நடத்துனர் தருமபுரியைச் சேர்ந்த முருகேசன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஸ்ஸில் இருந்த அடையாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க ஒரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குமார் (45) உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பஸ்ஸின் ஒரு பக்கவாட்டுப் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த விபத்து சம்பவத்தைப் பார்க்க வந்த வலைச்சேரிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (55) வேகமாக சாலையைக் கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...