சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக

Updated On :18 நவம்பர் 2012, 2:18 pm

பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பி.கொசவபட்டியைச் சேர்ந்த கதிர்வேலின் (48) மகள் ராதா (19). இவர் தாமரைப்பாடியில் உள்ள பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி.மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் வேடசந்தூர் வட்டம், வடமதுரை காவல் சரகம், பாடியூர் பி.கொசவபட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டில் ராதா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். மகளின் சடலத்தைப் பார்க்க ராமதாஸின் குடும்பத்தினர் கதிர்வேலை அனுமதிக்க மறுத்து விட்டனராம். இதனால் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக வடமதுரை காவல் நிலையத்தில் கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 4 மாதங்களிலேயே பெண் இறந்து போனது குறித்து பழனி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.