பரங்கிப்பேட்டை அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் அலையில் படகு கவிழ்ந்து இறந்து போனார்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஆயிரம் நாக்கு சலங்கைகாரத்தெருவைச் சேர்ந்த மீனவர்கள் கனகசபை (55), முத்தையன் (53), கண்ணன் (37) ஆகிய மூவரும் பைபர் படகு மூலம் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடலில் அலை அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் முத்தையன், கண்ணன் ஆகிய இரு மீனவர்களும் கடலில் நீந்தி வந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோயில் கடைகரைக்கு திரும்பினர்.
கனகசபையை காணவில்லை. இதுகுறித்து மீனவர்கள் படகுகள் மூலம் கனகசபையை தேடினர். இந்நிலையில் கனகசபையின் உடல் இன்று காலை பரங்கிப்பேட்டை அருகே கரை ஒதுங்கியது. இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.