அம்பாசமுத்திரத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி இறந்தார்.


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி இறந்தார்.
அம்பாசமுத்திரம் அண்ணாநகரை சேர்ந்த பரமசிவன் மகள் துர்காதேவி (5). இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாராம்.
ஆரம்பத்தில் சிறுமிக்கு தலைவலி ஏற்பட்டு பின்னர் காய்ச்சல் இருந்ததாம். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துர்காதேவி தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி துர்காதேவி இறந்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் இறந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யவில்லை என
சுகாதாரத்துறையினர் புகார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...