காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு அருகே முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது

ஈரோடு அருகே ரத்தினம்மா என்ற பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :25 நவம்பர் 2012, 7:50 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே ரத்தினம்மா என்ற பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 3 முறை கவுன்சிலராக இருந்தவர் ரத்தினம்மா (55). இவருக்கு ஈரோடு

பழையபாளையம் பகுதியில் செங்கோடம்பள்ளத்தில் ஹாலோபிளாக் விற்பனை செய்யும் கடை உள்ளது. கடந்த 

பிப்.14ம் தேதி  ரத்தினம்மா கடையில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கழுத்தை அறுத்து தாலிக்கொடியைப் பறித்து, பணத்தையும் எடுத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக ஈரோடை சேர்ந்த பிரபாகரன் (22) மணிகண்டன் (24) ரமேஷ்குமார் (25) கணேசன் (23) ஆகிய நான்குபேரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.