தேவரின மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடியில் பொதுக்கூட்டம்: கார்த்திக்
மதுரை அருகே தேவரின மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வரும் டிச.16ம் தேதி பரமக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று கூறினார் நடிகர் கார்த்திக்.


மதுரை அருகே தேவரின மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வரும் டிச.16ம் தேதி பரமக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று கூறினார் நடிகர் கார்த்திக்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது மதுரை அருகே தாக்குதல் நடந்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தங்கள் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் டிச.16ம் தேதி பரமக்குடியில் நடத்தப்படும் என்றார் நடிகர் கார்த்தி. மேலும், இது போலீசாரின் அனுமதியின் பேரிலேயே நடத்தப்படும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...