ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுரையில் சுவர் விளம்பரத்துக்குப் போட்டி போடும் உடன்பிறப்புகள்!

மதுரை என்றாலே தி.மு.க.வினரின் பிளக்ஸ் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றதாக இருந்தது. இப்போது, மீண்டும் சுவர் விளம்பரத்துக்காக சுவர்களை போட்டி போட்டு

News image
Updated On :26 நவம்பர் 2012, 6:41 am

மது

மதுரை என்றாலே தி.மு.க.வினரின் பிளக்ஸ் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றதாக இருந்தது. இப்போது, மீண்டும் சுவர் விளம்பரத்துக்காக சுவர்களை போட்டி போட்டு வளைத்துப் பிடித்து வருகிறார்கள் தி.மு.க.வினர்.

முன்னர் மு.க. அழகிரியின் கோட்டையாக இருந்த மதுரை நகரில், ஸ்டாலின் தொடர்பான விளம்பரங்கள், படங்களைப் பார்ப்பது அபூர்வமாக இருந்தது. அண்மைக் காலமாக மு.க.ஸ்டாலினும் மதுரை நகருக்கு அடிக்கடி வருகை தந்து, கட்சித் தொண்டர்கள், இளைஞர் அணியினர் என்று சந்திப்புகள் நடத்தி வருவதால், மு.க.ஸ்டாலினை வரவேற்றும், வாழ்த்து தெரிவித்தும் அங்கங்கே சுவர் விளம்பரங்களும் தட்டிகளும் முளைத்து வருகின்றன.

வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி மு.க. அழகிரியின் பிறந்த நாள் வருகிறது. மார்ச் மாதம் 1ம் தேதி மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் வருகிறது. குறிப்பாக இந்த வருடம் மணி விழா காண்கிறார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் விளம்பரங்களுக்காக சுவர்களில் குறியீடு செய்து முன்னதாகவே இடத்தைப் பிடித்து வைத்துள்ளனர். அதேபோல், மார்ச் 1ம் தேதி வரவிருக்கும் ஸ்டாலினின் பிறந்தநாளுக்காக இப்போதிருந்தே ஸ்டாலினின் ஆதரவாளர்களும் போட்டி போட்டு சுவர்களைப் பிடித்து வைத்து வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 24ம் தேதி தமிழக முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழக்கம்போல் களம் இறங்கும் அ.தி.மு.க.வினர் தற்போதைக்கு சற்றே மெத்தனமாக உள்ளனர். இப்படி சுவர் விளம்பரங்களுக்காக அரசியல் போட்டி நடப்பதால், அச்சத்தில் உள்ளனர் பொது மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.