போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூடங்குளம் விவகாரத்தில் விஞ்ஞானிகளுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பு அதிகரிக்க வேண்டும்: எம்.எஸ்.சுவாமிநாதன்

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் மக்கள், விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்றும், விஞ்ஞானிகள், மக்களுக்கு தெரியவில்லை என கூறுகின்றனர். விஞ்ஞானிகளுக்கும், மக்களுக்கும் இடையே விவாதமும்,  நெருக்கமான தொடர்பு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புரிதல் ஏற்படும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

News image
Updated On :4 அக்டோபர் 2012, 10:22 am

ஜி.சுந்தரராஜன்

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் மக்கள், விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்றும், விஞ்ஞானிகள், மக்களுக்கு தெரியவில்லை என கூறுகின்றனர். விஞ்ஞானிகளுக்கும், மக்களுக்கும் இடையே விவாதமும்,  நெருக்கமான தொடர்பு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புரிதல் ஏற்படும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 80 வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:

பசுமை வாயு (Green House Gas) பிரச்சனை இல்லாததால் அணுசக்தி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். அணுஉலை பாதுகாப்பு குறித்து மக்களிடடையே அச்சம் பற்றி சில கருத்துகள் நிலவுகிறது. சமீபத்தில் ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு அணு உலைக்கு எதிரான கருத்து நிலவுகிறது, அணுசக்திக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  அதே நேரத்தில் அணுக்கழிவு அகற்றுவது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  தொழில்சார்ந்த நிறுவனங்கள் சமுக நலத்திட்டங்களை மேற்கொள்வது போல் பல்கலைக்கழகங்களில் 'பல்கலைக்கழக சமூக பொறுப்புகள்' (University social Responsibilty) என்ற திட்டத்தை தொடங்க வேண்டும். இதன் மூலம் நீர்வளங்களை பாதுகாப்பது, 100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவது,  கணினி சார்ந்த அறிவு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற சமூக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தை இந்தியாவின் வளமையான முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் இலக்காக கொண்டு   விஷன் 2023 என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்து மக்களும் நவீன சமூகத்தின் அடிப்படை வசதிகளை பெற்று சமூக சூழலில் வாழும் நிலை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு தொழில்சார்ந்த அறிவும், அரசியல் ஒத்துழைப்பும் தேவை.  2023 விஷன் திட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க மகாபலிபுரம், சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் போன்ற பழமை வளமும், இயற்கை சார்ந்த காடுகளை பாதுகாப்பதும் அம்சமாக உள்ளது.  அதற்கு இந்த பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல்துறை பங்களித்துள்ளது பெருமைக்குரியதாகும். சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் பகுதியில் மாங்குரோவ் காடுகளினால் 2006 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்தி சேதத்தை தடுத்துள்ளது. மாங்குரோவ் மருத்துவ குணம் வாய்ந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.  சிதம்பரம் நகரம் முற்காலத்தில் தில்லைவணக்காடாக இருந்தது.  மாங்குரோவ் செடிகளின் ஒரு பிரிவாக தில்லைமரம் உள்ளது. இந்த தில்லைமரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடராஜர் கோயில் ஸத்லவிருட்சமாக அப்போதே வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளது என எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.