திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் மன்றம் ஆகியன பழைய கட்டடங்களில் இயங்கி வருகிறது. முந்தைய ஆட்சியில் இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற வளாகம் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது நீதிமன்ற கட்டடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன. குரங்குகள் அட்டகாசம் செய்து நீதிமன்றத்தின் கூரை ஓடுகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் ஹெல்மெட் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைப்பின் தலைவர் ஜோயல்ஹென்றி தலைமையில் செயலர் மீனாட்சிநாதன், பொருளாளர் சுரேஷ்குமார், வழக்குரைஞர்கள் செல்வராஜ், முத்துராமலிங்கம், வள்ளுவராஜ், ஜெகன், செந்தில்குமார், சண்முகசுந்தரம், அசோக்சுப்பிரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இந்த நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அமைப்பின் தலைவர் கூறியதாவது: கோரிக்கையை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தோம். அரசு இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் வரும் 11 ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அலையாத்திக்காடுகள் ஆராய்ச்சி மையம் கட்ட எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா்

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

