வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் சனிக்கிழமை சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2012, 2:37 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் சனிக்கிழமை சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் 750 பேர் உள்பட 2,500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தற்போது தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆலைக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஷிப்டுக்கு 4 மணி நேரம் மட்டும் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எஞ்சிய 4 மணி நேரம் பணியில் ஈடுபடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு வாரம் நடைபெறும் என்றார்  தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஏ. காமராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.