தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாஞ்சோலைக்கு தடையை மீறி சென்ற மின்வாரிய பணியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதிக்கு சனிக்கிழமை தடையை மீறி சென்ற மின்வாரிய பணியாளர் உள்ளிட்ட 4 பே

News image
Updated On :8 அக்டோபர் 2012, 2:58 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதிக்கு சனிக்கிழமை தடையை மீறி சென்ற மின்வாரிய பணியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அருவிகள், மாஞ்சோலை, களக்காடு செங்கல்தேரி போன்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. இங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிபெற்று செல்லலாம். இதனிடையே மாஞ்சோலை பகுதியில் தடையை மீறி சென்ற

மின்வாரிய பணியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

மாஞ்சோலை கீழ்கோதையாறில் உள்ள மின்வாரியக் குடியிருப்பில் சமையலராக பணி செய்பவர் ஹரிதாஸ். இவர் மேல்கோதையாறில் உள்ள மின்வாரிய குடியிருப்புக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஹரிதாஸ் வனத்துறை அனுமதிப் பெற்று கீழ்கோதையாறில் இருந்து வாகனம் மூலம் தனது பொருட்களை கொண்டு சென்றாராம்.

அப்போது ஹரிதாசுடன் அவரது நண்பர்கள் சங்கரன்கோவிலை சேர்ந்த மணி, பிரதீப், பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சென்றனராம். புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மேல்கோதையாறுக்கு அனுமதியின்றி மணி, பிரதீப், பாலசுப்பிரமணியன் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மின்வாரிய பணியாளர் ஹரிதாஸ், அவருடன் சென்ற நண்பர்கள் மணி, பிரதீப், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது என்றார் புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.