போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கடத்தல்

சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது யாசின். ஒரு திருமண மண்டப முதலாளி. இவரது மகன் முகமது ஃபைசல் (22). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

News image
Updated On :9 அக்டோபர் 2012, 3:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது யாசின். ஒரு திருமண மண்டப முதலாளி. இவரது மகன் முகமது ஃபைசல் (22). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன் 7ம் தேதி அவர் சிதம்பரம் வந்தார். பின்னர் நேற்று 8ம் தேதி காலை அவர் திருச்சிக்குத் திரும்பிச் சென்றார். திருச்சி சென்றடைந்தவுடன் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் திருச்சி வந்துவிட்ட தகவலையும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சற்று நேரத்தில் திடீரென முகமது யாசினுக்கு, உங்கள் மகன் கடத்தப்பட்டுள்ளார். நீங்கள் ரூ.2 கோடி கொடுத்தால்தான் மகனை விடுவிப்போம் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை அடுத்து, முகமது யாசின் சிதம்பரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.