போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பயிர்காப்பீடு தொகையை கடனில் வரவு வைக்க உயர்நீதிமன்றம் தடை

பயிர் காப்பீடு தொகையை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2012, 5:25 pm

ஜி.சுந்தரராஜன்

பயிர் காப்பீடு தொகையை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகையை கடனில் வரவு வைக்கும்படி மாவட்ட கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் கிராம கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கை தாக்கல் செய்தார். வழக்குரைஞர் அஜாய்கோஷ் வாதாடினார். இவ்வழக்கு விசாரணை தலைமைநீதபதி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்ககு. விசாரணையில் தமிழக உழவர் முன்னணி வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையை கூட்டுறவு கடனுக்கு ஈடு செய்து கொள்ளும் கூட்டுறவுத்துறை ஆணைக்கு தடை விதித்தது. மேலும் 3 வார காலத்திற்குள் பதலளிக்குமாறு கூட்டுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தானே புயலால் பேரழிவுக்கு உள்ளாகி, காவிரிநீர் மறுக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பயிரை இழந்தும், தற்போது மின்வெட்டால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி தத்தளிக்கும் விவசாயிகள் இந்த ஆணையின் மூலம் நிவாரணம் பெறுவார்கள் என்பது சற்று மகிழ்ச்சியாக உள்ளது என உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.