தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மடிக்கணினி வழங்கவில்லையாம்: கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :13 அக்டோபர் 2012, 3:21 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியான சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோ கல்லூரியில் 750 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.