அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டிது அவசியம் என தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தெரிவித்தார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஊனமுற்றோர் உரிமைக் குரல் இதழ் வெளியீட்டு விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ் இணைய தள தொடக்க விழா ஆளுநர் மாளிகையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது.
விழாவில், இதழை வெளியிட்டும், இணைய தளத்தை தொடக்கி வைத்தும் ஆளுநர் பேசியபோது
"அர்ப்பணிப்பு, உண்மை, சுயநலமற்ற சேவை போன்றவைதான் அரசு சாரா தொண்டு நிறுவங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். இன்று காளான்கள் போல ஏராளமான சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கருணை இல்லங்களை காண்கிறோம். எனவே, அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம். உண்மையும், அர்ப்பணிப்பும் உள்ள நபர்களால் மட்டுமே சிறப்பான சேவையை செய்ய முடியும் என்பதோடு, தகுதி வாய்ந்த நபர்களுக்கான உதவிகளும் உறுதியாக கிடைக்கும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

