போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரத்தில் ரயிலில் இருந்து விழுந்து டிரைவர் காயம்: மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கீழே விழுந்து துணை டிரைவர் காயமுற்று மயிலாடுதுறை மருத்துவமனையில்

News image
Updated On :14 அக்டோபர் 2012, 11:36 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கீழே விழுந்து துணை டிரைவர் காயமுற்று மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் ரயில் புறப்படும் போது துணைடிரைவர் முஜிபுர்ரஹ்மான் கொடி காட்டுவதற்காக வெளியே தலையை நீட்டியுள்ளார். அப்போது ரயிலிலிருந்து தலைக்குப்புற கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். கீழே விழுந்ததில் கால் மற்றும் கையில் பலத்த காயமுற்றை துணை டிரைவர் முஜிபுர் ரஹ்மான் அதே ரயில் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காயமுற்ற துணைடிரைவர் முஜிபுர் ரஹ்மானின் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லமாகும். தற்போது அவர் குடும்பத்துடன் விழுப்புரம் தென்னக ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.