நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோட்டில் இன்றும் சோதனை: 61 கொத்தடிமைகள் மீட்பு?

ஈரோடு பகுதியில் நேற்று நூற்பாலை ஒன்றில் நடந்த சோதனையில் 27 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப் பட்டனர். மேலும் கொத்தடிமைகளாக இருந்தவகளும் மீட்கப் பட்டனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 9:16 am

ஜபலின் ஜான்

ஈரோடு பகுதியில் நேற்று நூற்பாலை ஒன்றில் நடந்த சோதனையில் 27 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப் பட்டனர். மேலும் கொத்தடிமைகளாக இருந்தவகளும் மீட்கப் பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்றும், அதே நூற்பாலை நிறுவனத்துக்குச் சொந்தமான இன்னொரு நூற்பாலையில் இன்று சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர்.

ஈரோடு அருகே கணபதிபாளையம் பகுதியில் உள்ள மன்னாதம்பாளையம் என்ற இடத்தில் செயல்படுகிறது அந்த நூற்பாலை. இதில், 61 கொத்தடிமைகள் இருப்பதாகத் தகவல் தெரியவந்தது. இவர்களில் 30 பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதை அடுத்து, ஈரோடு வட்டாட்சியர் பூபதி தலைமையில்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட மாவட்ட இயக்குநர் கே.பி.சண்முகம்

மற்றும் உயரதிகாரிகள் அவர்களை மீட்கச் சென்றனர். நூற்பாலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.