/

திருக்கோவிலூர் அருகே கத்தியால் குத்தியதில் இருவர் பலி , இருவர் காயம்

முன்விரோதம் காரணமாக திருக்கோவிலூர் அருகே கத்தியால் குத்திய சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2012, 12:00 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

முன்விரோதம் காரணமாக திருக்கோவிலூர் அருகே கத்தியால் குத்திய சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.

திருக்கோவிலூர் அருகே குடமுரட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சுந்தர் (45), இவரது குடும்பத்துக்கும், ஏழுமலை மகன் தரணி என்பவரது குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், இன்று திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில் இருந்து பிரிந்து குடமுரட்டி கிராமத்துக்குச் செல்லும் வழியில் சுந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது தரணி மற்றும் அவரது சகோதரர் சின்னதுரை மற்றும் வீரமுத்து மகன் சம்பத் ஆகிய மூவரும் சுந்தரிடம் வாய்த்தகராறு செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சுந்தரின் சகோதரர் கார்த்தி, சுந்தர் மனைவி ராணி, சுந்தர் மகன் விக்னேஷ் ஆகிய மூவரும் அங்கு வந்துள்ளன்ர்,

தரணி, சின்னதுரை, சம்பத் ஆகிய மூவரும், சுந்தர், கார்த்தி, விக்னேஷ், ராணி ஆகிய நான்கு பேரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கார்த்தி, சுந்தர் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ராணி, விக்னேஷ் ஆகியோர் காயமடைந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த கார்த்தி, சுந்தர் உடல்களை போலிஸார் கைப்பற்ற சுமார் 1 மணி நேரம் ஆனதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அரகண்டநல்லூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.