தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குத்தகை நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி கோயிலில் குடியேறிய மக்கள்

சொந்தமான நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர், பொதுமக்கள் கோயில் வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டு தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 அக்டோபர் 2012, 9:25 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர், பொதுமக்கள் கோயில் வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டு தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி கீழத் தெருவில் பிள்ளையன் கட்டளைக்கு
சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை 54 ஆண்டுகளுக்கு முன் குத்தகை எடுத்தவர்
அந்நிலத்தை விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவி்த்து, குத்தகையை ரத்து
செய்து பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்த
வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினர், அப்பகுதியை
சேர்ந்த பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கோயிலில் திரண்டனர்.

பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான அந்த நிலத்தில் 87 நபருக்கு குடிசை அமைக்க
இருப்பதாக போராட்டக்குழுவினர் தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காவல் ஆய்வாளர் ரா. பூமிநாதன் தலைமையில் போலீஸார்
குவிக்கப்பட்டனர்.

இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் பால்மாரியப்பன், மாவட்டப்
பொதுச்செயலர் தங்கமனோகர், மாவட்ட துணைத் தலைவ்ர பால்ராஜ் மற்றும்
போராட்டக்குழுவினருடன் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆ. சிவகாமி,
டி.எஸ்.பி. மு. முத்துசங்கரலிங்கம், பிள்ளையன் கட்டளையின் நிர்வாகஅதிகாரி
வெள்ளைசாமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் உயர் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும். குத்தகையை ரத்து செய்து பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான நிலத்தை
ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி
அங்குள்ள கோயிலில் பொதுமக்கள் குடியேறினர். கோரிக்கை நிறைவேறும் வரை
போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.