பெரம்பலூரில் பஸ் மரத்தில் மோதி 2 பேர் பலி
பெரம்பலூர், செப்.3: பெரம்பலூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி 2 பேர் பலியாயினர். திருத்தணியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்று, பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்த


பெரம்பலூர், செப்.3: பெரம்பலூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி 2 பேர் பலியாயினர். திருத்தணியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்று, பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்தபோது,
சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா சிறுகளத்தூரைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரபு (35) மற்றும், மதுரை மாவட்டம், காரைக்கேணி பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் மனைவி ஆதிலட்சுமி (55) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். 37 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி பொது மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...