திருவாதவூர் - இடையப்பட்டி பகுதியில் முதல் முறையாக ஆளில்லாத விமானம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், லட்சக் கணக்கான கிரானைட் கற்கள் பதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், இந்தக் கற்களுக்கு இடையே பீரோ, மரப் பெட்டிகள் சிலவும் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை உடைத்துத் திறந்தனர். அவற்றில், பணப்பெட்டகம் வைக்கப்பட்ட பீரோவைத் திறந்து பார்த்த போது அவை காலியாக இருந்தன. மேலும் 3 பெட்டகங்களைச் சோதனை செய்தபோது, அவற்றில் கட்டுக் கட்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வினாத்தாள்- விடைத்தாள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.