தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேலம் திமுக பிரமுகர் படுகொலை : தருமபுரி நீதிமன்றத்தில் நால்வர் சரண்

தருமபுரி, செப்., 07 : சேலம் திமுக பிரமுகர் சண்மகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை செய்து வந்த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am

முருகன்

தருமபுரி, செப்., 07 : சேலம் திமுக பிரமுகர் சண்மகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை செய்து வந்தனர். கொலை நடந்த விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக தருமபுரி குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில், தங்கராஜ் (27), பாபு (33), வீரராகவன் (27), செம்பட்டையன் என்கிற நாகராஜ் (25) ஆகியோர் இன்று சரண் அடைந்துள்ளனர். குற்றவியல் இரண்டாவது நீதிபதி (பொறுப்பு) இந்துலதா நால்வரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.