மேலூரில் அடுத்தடுத்து சாலை விபத்து : இருவர் பலி
மேலூர், செப்., 08 : மேலூர் அருகே நேற்று அடுத்தடுத்து நடந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜீவானந்


மேலூர், செப்., 08 : மேலூர் அருகே நேற்று அடுத்தடுத்து நடந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜீவானந்தம் (38) அரபு நாட்டில் வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில்தான் சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்த நிலையில், இவரும், இவரது நண்பர் முருகையாவின் மகன் ஜோதிமணி (35) ஆகியோர் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற போது மதுரையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோதிமணி பலத்த காயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலுர் - மதுரை நான்கு வழிச் சாலையில் வெள்ளரிப்பட்டி அருகே நூர்பாலை தொழிலாளர் அய்யனன் (38) வேலை முடிந்து இன்று அதிகாலை நடந்து வந்த போது மதுரையில் இருந்து வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...