மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 17 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில், வழக்குரைஞர்களுக்கான சேம நல நிதியை ரூ.5.25 லட்சமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி வழங்கி அறிவித்தார். அதன் பின்னர் அதற்கு எத

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:27 am

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 17 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில், வழக்குரைஞர்களுக்கான சேம நல நிதியை ரூ.5.25 லட்சமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி வழங்கி அறிவித்தார். அதன் பின்னர் அதற்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி, தனது ஆட்சி காலத்திலேயே இந்த தொகை உயர்த்தி வழங்கப்பட்டதாகக் கூறி, குடியரசுத்  தலைவர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியதற்கு வழக்குரைஞர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரிவு வழக்குரைஞர்களின் துணை மேலாளர் சுரேஷ் நெப்போலியன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை வழக்குரைஞர்கள் சாலையில் போட்டு எரித்தனர்.  அப்போது அதிமுக வழக்குரைஞர்கள் முருகன், ஆணழகன உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.