தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீர்மானம் நிறைவேற்ற லஞ்சம்: தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் சலசலப்பு

தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற லஞ்சம் கொடுத்ததாக பாமக உறுப்பினர் கூறிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2012, 7:04 am

முருகன்

தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற லஞ்சம் கொடுத்ததாக பாமக உறுப்பினர் கூறிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி நகர்மன்றத்தில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் நகர்மன்றத் தலைவராக சுமதி என்பவர் உள்ளார். துணைத்தலைவராக எஸ்.ஆர். ஆறுமுகம் என்பவர் உள்ளார். அதிமுகவைச் சேர்ந்தவர்களானாலும், தலைவருக்கு எதிராக பல்வேறு புகார்களைக் கூறி, நகர்மன்றக் கூட்டத்தை நடைபெறவிடாமல் பெரும்பாலும் முடக்கி விடுகின்றனர். எனவே, பல தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இந்நிலையில், இன்று, முக்கியமாக 2 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மீதம் உள்ள தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் வெளிநடப்பு செய்தனர்.

இன்று கூட்டம் நடைபெற்றபோது, திடீரென 3வது வார்டு பாமக உறுப்பினர்  திருப்பதி எழுந்து, 50 ரூபாய் கட்டு ஒன்றை வெளியில் காட்டி, தீர்மானங்கள் நிறைவேற ஒத்துழைப்பு கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாகத் தரப்பட்டது என்று புகார் கூறினார். இதனால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.