திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி இது குறித்து கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது ஆட்சியில், சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐயை தவறாகப் பயன்படுத்தி தன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால், சிபிஐயை தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயக நாட்டில் இது நல்ல வழிமுறை அல்ல, இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









