பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுவிக்கக்கோரியும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 3) பந்த் நடைபெறும் என்று பா.ம.க., வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கவுண்டம்பாளையம் வன்னியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாநில ஆலோசகர் கே.ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
பா.ம.க., வன்னியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேணுகோபால், ஞானசேகரன், தங்க.அறிவழகன், ஜெயபாலன், வடிவேலு, ரவி, கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், அவரை விடுவிக்கக் கோரியும் வரும் வெள்ளிக்கிழமை (மே 3) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









