/
மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகள் இருவர் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை ரயிலில் இருந்து இருவரும் இறங்கி நின்ற சிறிது நேரத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து இருவர் மீதும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டான். இந்த சம்பவத்தில், அவர்களுடன் வந்த அவரது தந்தை மற்றும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவரை பற்றிய விவரம் இன்னும் தெரியவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









