வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தனியார் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் நிறுவன வாகனம் மீது கல்வீச்சி

தம்மம்பட்டி அருகே தனியார் வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர், தொழிற்சாலைக்குரிய

Updated On :11 மே 2013, 2:09 pm IST

தம்மம்பட்டி அருகே தனியார் வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர், தொழிற்சாலைக்குரிய வேன் மீது கல்வீசியதையடுத்து அவரை போலீசார் பிடித்துவைத்து விசாரித்து வருகின்றனர்.

தம்மம்பட்டி அருகே முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் வேலைக்குச் சென்று வருகின்றனர். தொழிற்சாலையின் வேன் மூலம் தொழிலாளர்கள் தினந்தோறும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தம்மம்பட்டி அருகே நேருநகர் காலனியைச் சேர்ந்த பாண்டியன்(34), அண்மையில் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டாராம்.

தொழிற்சாலை வேன், நேற்று இரவு தம்மம்பட்டிக்குள் வந்தபோது பாண்டியன், அந்தவேன் மீது கல் எடுத்து வீசனாராம். இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் பாண்டியனிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.