நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சி.பி.ஐ. செயல்பாட்டில் தலையீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது: ரஞ்சித் சின்ஹா

சி.பி.ஐ.க்கு சுதந்திரம், தன்னாட்சி கிடைப்பது நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே நடக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு

Updated On :11 மே 2013, 5:36 pm IST

சி.பி.ஐ.க்கு சுதந்திரம், தன்னாட்சி கிடைப்பது நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே நடக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சி.பி.ஐ.க்கு சுதந்திரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்காது என்றும் அது நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே நடக்கும் என்றும் கருதுகிறேன். எனது 37 ஆண்டு அரசுப்பணி அனுபவத்தில், மாநிலங்களில் போலீஸாரின் செயல்பாடு மற்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் அரசியல் தலையீட்டைப் பார்த்திருக்கிறேன். இப்போது எனது பதவிக்காலமே முடிவடைய உள்ள நிலையில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இப்போது நீதிமன்றத்தின் கண்டனம் காரணமாக நல்லது நடப்பது மகிழ்ச்சி தருகிறது. அதாவது, சி.பி.ஐ.க்கு செயல்பாட்டுத் தன்னாட்சி அளிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சியெடுத்து வருகிறது.

சி.பி.ஐ. அமைப்பு என்பது முழுச் சுந்தந்திரம் பெற்றது அல்ல என்பதில் சந்தேகமே இல்லை. "யாரும் அதிகாரம் செலுத்தாமல் சி.பி.ஐ. செயல்படுகிறது' என்று யாராவது கூறினால் அது முழுப் பொய்தான். சி.பி.ஐ. செயல்பாட்டில் தலையீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வெளியார் குறுக்கீடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்ட முதல் சி.பி.ஐ. இயக்குநர் நான்தான். உண்மையைப் பேச வேண்டும் என்பதிலும் அனைத்துத் தகவல்களையும் அளிக்க வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன்.

சி.பி.ஐ. அமைப்பின் சுதந்திரத்துக்காக சட்ட வரைவை உருவாக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. நானும் இச்சட்ட வரைவுக்கான ஆலோசனைகளைப் பட்டியலிடுவதற்காக சி.பி.ஐ. அமைப்புக்குள்ளேயே ஒரு குழுவை அமைத்துள்ளேன். அந்தப் பட்டியலைப் பின்னர் அரசிடம் ஒப்படைப்போம். இந்தக் குழுவில் முன்னாள் சி.பி.ஐ. தலைவர்களும், சில சட்ட நிபுணர்களும் இடம்பெறுவார்கள் என்றார் ரஞ்சித் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.