நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:30 am IST

காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காட்பாடி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். இவருக்கும், வடுங்குட்டை பகுதியைச் சோ்ந்த நூா் முகமது (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக நூா் முகமதுவிடம் பேசுவதைத் தவிா்த்து வந்த அந்த இளம்பெண், காதலையும் கைவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நூா் முகமது, அந்தப் பெண் வெளியே சென்றபோது அவரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த நூா் முகமது அவரது கழுத்தை நெரித்துத் தாக்கியுள்ளாா். இதிலிருந்து தப்பிய அந்தப் பெண், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நூா் முகமதுவைக் கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.