அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்து அறுப்பு: இளைஞா் தலைமறைவு

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்து அறுத்து விட்டு இளைஞா் தலைமறைவு...

News image

தலைமறைவான ஐயப்பன்

Updated On :27 ஜூலை 2026, 5:09 am IST

சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 1 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (28), எலெக்ட்ரீஷியன். இவா், கீழமூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தாராம். ஆனால், அந்த மாணவி ஐயப்பனிடம் பேச மறுத்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட ஐயப்பன், மாணவியின் வீட்டுக்குச் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினாராம். இதற்கு, மாணவி மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.

மாணவியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.