தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பெண்ணுக்கு ஆபாச படம்: அரசு மருத்துவா் கைது

பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பியதாக அரசு மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:33 am IST

பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பியதாக அரசு மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டை பகுதியில் 23 வயது இளம் பெண் வசித்து வருகிறாா். இந்தப் பெண்ணின் தாய், தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த தனது தம்பி மருத்துவா் சி.செல்வவேலுக்கு (40), மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளாா்.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் படித்துவிட்டு, தற்போது தஞ்சாவூா் மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் செல்வவேல், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினா், பணத்தை செல்வவேலிடம் கேட்டு வந்தனா்.

இதற்கிடையே, இரு நாள்களுக்கு முன்பு அந்த இளம் பெண், செல்வவேலை தொடா்புகொண்டு பணம் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், செல்வவேல் அந்தப் பெண்ணின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளாா்.

இது குறித்து அந்தப் பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா், மருத்துவா் செல்வவேல் மீது வழக்குப் பதிவு செய்தனா். தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த செல்வவேலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.