நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால் ராஜினாமா செய்துவிடுவார் : ராஜ்நாத்

பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால், வேறு வழியே இல்லாமல், ராஜினாமா செய்து விடுவார் என்று பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 3:54 pm IST

பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால், வேறு வழியே இல்லாமல், ராஜினாமா செய்து விடுவார் என்று பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், மத்திய அரசை மாற்றிவிட்டு புதிய அரசு அமைய வேண்டும். அது ஒன்றே தற்போதைய சிறந்த வழி என்று கூறினார்.

மேலும், நேற்று இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். ஒருவர் அல்லது இருவர் பதவி விலகியிருப்பது விஷயமே இல்லை. ஒட்டு மொத்த நிர்வாகமே சீர்குலைந்திருக்கும் போது எந்த ஒரு சிறிய மாற்றமும் நீர்வாகத்தை சீர்திருத்திவிடாது. ஒரு வேளை பிரதமர் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொண்டால், வேறு வழியே இல்லாமல் ராஜினாமா செய்து விடுவார் என்றும் ராஜ்நாத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.